Tuesday, November 23, 2010

மறவாமல் இருக்க...

மலருக்கு ஆசை
மண்ணில் விழாமல் இருக்க...
சூரியனுக்கு ஆசை
மறையாமல் இருக்க...
நிலவுக்கு ஆசை
தேயாமல் இருக்க...
எனக்கு ஆசை
நீ என்னை
மறவாமல் இருக்க...

Monday, November 22, 2010

பிறந்த நாள்...

நீ அழுவதைப் பார்த்து
உன் அம்மா
சிரித்த ஒரே ஒரு நாள்
உன் பிறந்த நாள்...

உன்னைப்போல...!

நட்பு என்பது
இதயம் போல...
நமக்கு தெரியாமல்
நமக்காக துடிக்கும்
உன்னைப்போல...!

கூடாது...

நாம் வாழும் வரை
நம்மை யாரும்
வெறுக்க கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும்
மறக்க கூடாது...

அழகு...

கல்லறை கூட
அழகாகத் தெரியும்
உண்மையான காதல்
அங்கு உறங்கும் போது...

ஜென்மம்...

பார்க்க கண்கள் வேண்டும்...
சுவாசிக்க இதயம் வேண்டும்...
உன்னை போல நட்பு கிடைக்க
இன்னொரு
ஜென்மம் வேண்டும் ...

சுமப்பதற்காக.

மறு பிறவி இருந்தால்
செருப்பாக பிறக்க
வேண்டும்...
என் அம்மா
காலில் மிதி பட அல்ல...
என்னை சுமந்த அவளை
ஒரு முறை நான்
சுமப்பதற்காக...!