Monday, November 22, 2010

என்றுமே அழகு...

தெரியாத காற்றும்...
புரியாத கவிதையும்...
சொல்லாத காதலும்...
கலையாத கனவும்...
என்றுமே அழகு தான்...!

மறந்து...

என் முன்னால்
எப்பொழுதும் சிரிக்கும்
என் நண்பன்
முதல் முறையாக
அழுகிறான்...!
எழுந்து துடைக்க நினைக்கிறேன்...
நான்இறந்து
கிடக்கிறேன்... என்பதையும்
மறந்து...!

நட்பு

உறவு முறை
இல்லாத உறவே
நட்பு...

உன் அன்புக்காக...

காலம் சென்றாலும்...
கனவுகள் மறைந்தாலும்...
கவிதைகள் அழிந்தாலும்...
என் உயிர் பிரிந்தாலும்...
காற்றோடு தொடர்ந்து வருவேன்...
உன் அன்புக்காக...!

துணை

நிழல் கூட வெளிச்சம்
உள்ள வரை தான்
துணைக்கு வரும்...!
ஆனால், உண்மையான அன்பு
உயிர் உள்ள வரை
துணைக்கு வரும்...!

ஆயுள்

பூக்களுக்கு ஒரு நாள்
தான் ஆயுள்
ஆனால், அதையும் பறித்து
பூஜை செய்கிறான்
மனிதன் நூறு வருட
ஆயுள் வேண்டி ...!

சொந்தம்

ஆயிரம் சொந்தம் நம்மை
தேடி வரும்...
ஆனால், தேடினாலும் கிடைக்காத
ஒரே சொந்தம்
நல்ல நண்பர்கள்...